அந்தமானில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி வட தமிழகத்தை நோக்கி நகரும். ஆனால் காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுவதற்கான வாய்ப்பு இல்லை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது : “தெற்கு அந்தமானில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று முதலில் கணிக்கப்பட்ட நிலையில் அவ்வாறு மாறுவதற்கு வாய்ப்பில்லை என்றும், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறாது” எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இருப்பினும் தமிழகத்தில் சில பகுதிகளில் மிதமான முதல் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
Categories