Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும்… வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதாவது: குறைந்த காற்றழுத்தம் காரணமாக வரும் 18ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும். இதனால் தமிழகத்தில் இன்னும் ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.

அதன்படி ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், விழுப்புரம், கரூர், திருச்சி, பெரம்பலூர், புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும். சென்னையை பொருத்தவரை நவம்பர் 17 மற்றும் 18ம் தேதிகளில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |