Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே..! வீதியில் உலா வரும் தேள்கள்… 3 பேர் உயிரிழப்பு… சுகாதார மந்திரியின் பரபரப்பு தகவல்..!!

எகிப்தில் தேள் கொட்டியதால் 500-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

எகிப்தில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழையால் வாகனங்கள், வீடுகள் மற்றும் விவசாய பண்ணைகள் மோசமாக சேதமடைந்துள்ளது. மேலும் தேள்கள் வீதிகளிலும், தெருக்களிலும் வசிப்பிடங்களான துளைகளில் இருந்து வெளிவந்து காணப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்நாட்டின் சுகாதார மந்திரி கலித் கபார் இதுவரை 500-க்கும் மேற்பட்ட மக்களை தேள்கள் கடித்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.

அதோடு மட்டுமில்லாமல் அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே 3 பேர் தேள்கள் கடித்ததில் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |