இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் மாரியம்மன் கோவில்பட்டி அருகே உள்ள ஆர்.எம்.டி.சி காலனியில் ராமர் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவர் தனது இருசக்கர வாகனத்தில் பழனிசெட்டிபட்டி அருகே சென்று கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் ராமரின் இருசக்கர வாகனம் திடீரென நிலை தடுமாறி அவர் கீழே விழுந்துள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக ராமரை மீட்டு தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதனையடுத்து மருத்துவர்கள் மேல்சிகிச்சைக்காக ராமரை மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் சிகிச்சை பலனின்றி ராமர் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற பழனிசெட்டிபட்டி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ராமரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.