இஸ்ரேல் அரசு அந்நாட்டில் உள்ள 5 முதல் 11 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
அமெரிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் 5 முதல் 11 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்குக் கொரோனா தடுப்பூசி செலுத்த ஒப்புதல் அளித்துள்ளனர். இந்த நிலையில் இஸ்ரேல் அரசும் தற்போது 5 முதல் 11 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும் அந்த நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் மூலம் தொற்று பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ள நிலையில் குழந்தைகளுக்கு தற்போது கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இஸ்ரேல் சுகாதாரத்துறை அமைச்சகம் பைசர் பயோன்டெக் நிறுவனத்தின் தடுப்பூசியை சிறுவர்களுக்கு செலுத்துவது தொடர்பில் மருத்துவ நிபுணர்களிடம் கலந்து ஆலோசிக்கப்பட்டதாக கூறியுள்ளது. இதையடுத்து வரும் நாட்களில் குழந்தைகளுக்கு தடுப்பூசி திட்டம் தொடங்குவதற்கான தேதியும் அறிவிக்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.