குழந்தை இல்லாத வேதனையில் கட்டுமான தொழிலாளி அரளி விதை சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் கருவேல்நாயக்கன்பட்டியில் உள்ள வள்ளுவர் காலனியில் அருண்பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். கட்டுமான தொழிலாளியான இவருக்கு முத்துமீனா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆன நிலையில் இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இதனால் கணவன் மனைவி இருவரும் மனமுடைந்து இருந்துள்ளனர். இதனையடுத்து விரக்தியடைந்த அருண்பாண்டி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் அரளிவிதையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனைதொடர்ந்து அருண்பாண்டியன் மயங்கி கிடப்பதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு தேனி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அருண்குமார் உயிரிழந்துள்ளார். இதனையறிந்த தேனி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அருண்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.