Categories
உலக செய்திகள்

காலநிலை மாற்றத்தால் உருமாற்றமா..? பறவைகள் குறித்த ஆய்வு… வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!!

அமேசான் காடுகளில் உள்ள பறவைகள் காலநிலை மாற்றத்தால் உருமாற்றம் அடைந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளனர்.

அமேசான் காடுகளில் உள்ள பறவைகள் காலநிலை மாற்றத்தால் உருமாற்றம் அடைந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளனர். அதாவது அமேசானில் உள்ள பறவைகளின் அளவு குறித்து 1980-களில் இருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளை கொண்டு ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்துள்ளனர்.

அந்த ஆய்வில் இறக்கைகள் நீண்டும், பறவைகள் சிறியதாகவும் இருப்பதனை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஏனென்றால் வெப்பத்தை சிதற அடிப்பதில் சிறிய உடல்கள் மிகவும் திறமையானவை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதேபோல் அந்த பறவைகள் தரையை ஒட்டிய பகுதிகளில் கூடுகள் கட்டி வசிப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

Categories

Tech |