பேன்சி ஸ்டோரின் பூட்டை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தேனி வருகின்றனர்.
தேனி மாவட்டம் கடமலைக்குண்டு பகுதியில் பாலன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் பேன்சி ஸ்டோர் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் விற்பனையை முடித்து விட்டு பாலன் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து நேற்று காலையில் வழக்கம்போல கடையை திறப்பதற்காக சென்றுள்ளார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 60,000 ரூபாய் திருடு போயிருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பாலன் உடனடியாக கடமலைக்குண்டு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதன் அடிப்படையில் பாலன் கடையில் பொருத்தப்பட்ட சி.சி.டி.வி கேமராவை பார்வையிட்டுள்ளனர். அதில் வாலிபர் ஒருவர் முகக்கவசம் அணிந்துகொண்டு கடையில் பூட்டை உடைத்து திருடியது பதிவாகியிருந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர். இதேபோல் 2 தினங்களுக்கு முன்பு கடமலைக்குண்டு சங்கம்பட்டி தெருவில் ஒருவரது இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதனையும் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.