Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

12 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்…. “மாதவனுக்கு சாகும் வரை ஆயுள்”…. மகளிர் நீதிமன்றம் அதிரடி!!

 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி கடந்த ஜூன் மாதம் 30ஆம் தேதி வீட்டில் இருந்தபோது, திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியை சேர்ந்த 27 வயதான மாதவன் என்பவன் அத்துமீறி வீடு புகுந்து சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளான்.. மேலும் அந்த சிறுமியை அடித்த போது, அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்..

பின்னர் குற்றவாளியை அடித்து உதைத்த மக்கள் கீரனூர் மகளிர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.. அதனைத்தொடர்ந்து போலீசார் அவனை கைது செய்து சிறையிலடைத்து இருந்தனர்.. அதாவது, பாலியல் வன்புணர்வு, அத்துமீறி குழந்தையை தாக்கியது உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது..

அதன் பின்பு ஜூலை 22 ஆம் தேதி சம்பந்தமற்ற குற்றவாளி குண்டர் சட்டத்தில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தான்.. இந்த வழக்கு புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்தநிலையில், ஜூன் 30-ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்திற்கு 4 மாத காலத்துக்குப் பின் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது..

இதன்படி, சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்து குற்றவாளிக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து, சாகும் வரையில் சிறையில் அடைக்க நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்..மேலும்  அரசு சார்பில் 4 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.. இதற்கு முன்பு இதே போன்று குற்றம் செய்தவர்கள் 3 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்ட நிலையில், இந்த குற்றவாளிக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை கொடுத்தது இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |