ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கடந்த 1989-ம் ஆண்டு இன்றைய நாளில் பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் இந்திய அணியில் அறிமுகமானார்.
கிரிக்கெட்டின் கடவுள் என ரசிகர்களால் அழைக்கப்படும் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கடந்த 1989-ம் ஆண்டு இதே நாளில் தன்னுடைய 16வது வயதில் கராச்சியில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் அறிமுகமானார் இதையடுத்து சர்வதேச போட்டியில் அவர் அறிமுகமாகி 32 ஆண்டுகள் நிறைவடைந்ததை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அதோடு அவர் அறிமுகமான அதே போட்டியில் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனிஸ் அறிமுகமானார் .அப்போது டிராவில் முடிந்த இந்த டெஸ்டில் சச்சின் டெண்டுல்கரை முதல் இன்னிங்ஸில் 15 ரன்னில் வக்கார் யூனிஸ் அவுட் ஆக்கினார். இதையடுத்து கடந்த 2013-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து சச்சின் டெண்டுல்கர் விடைபெற்றார். இதுவரை டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன் குவித்தவர் மற்றும் சர்வதேச அளவில் அதிக சதமடித்த வீரர் என்ற சாதனைக்கு சச்சின் டெண்டுல்கர் சொந்தக்காரராகி உள்ளார்.
இதையடுத்து கடந்த 2019ஆம் ஆண்டு ஐசிசி புகழ் பெற்றவர்களின் பட்டியலில் ஆறாவது இடம் பிடித்த இந்தியர் என்ற பெருமையை சச்சின் டெண்டுல்கர் பெற்றுள்ளார் .இதுவரை டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று விதமான போட்டிகளிலும் விளையாடியுள்ள சச்சின் டெண்டுல்கர் மொத்தமாக 34 ,351 ரன்கள் குவித்துள்ளார் .அதோடு அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார் .இது இரண்டாவது இடத்தில் உள்ள இலங்கை அணியில் முன்னாள் வீரர் குமார் சங்கக்காரவை விட 6000 ரன்கள் அதிகமாகும். இதனிடையே தற்போது நடந்து வரும் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வழிகாட்டியாக சச்சின் டெண்டுல்கர் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
🗓️ #OnThisDay
1989: @sachin_rt made his #TeamIndia debut.
2013: The legend walked out to bat for the one final time in international cricket.
🇮🇳 🙌 👏 🙏 pic.twitter.com/L4hCxpLrGP
— BCCI (@BCCI) November 15, 2021