Categories
தேசிய செய்திகள்

இரவில் உடற்கூறாய்வு செய்தால் இனி…. வீடியோ பதிவு கட்டாயம்…. மத்திய அரசு அறிவிப்பு….!!!!

இரவு நேரங்களில் நடத்தப்படும் உடற்கூறு ஆய்வுக்காக இனி வீடியோ பதிவு செய்வது கட்டாயம் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மருத்துவமனைகளில் இரவு நேரங்களில் உடற்கூறு ஆய்வு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இரவில் நடத்தப்படுகின்ற உடற்கூறு ஆய்வில் உண்மைத்தன்மை மீது கேள்வி எழுப்ப படுவதை தவிர்க்க கூடிய வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் இரவு நேர உடற்கூறு ஆய்வுக்காக வசதிகளை மருத்துவமனை நிர்வாகம் செய்து தர வேண்டும் என்றும், இரவு நேர உடற்கூறு ஆய்வுக்கு அனுமதிப்பதன் மூலம் நேர விரையம் குறையும் என்றும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

Categories

Tech |