Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கார்-இருசக்கர வாகனம் மோதல்… என்ஜீனியருக்கு ஏற்பட்ட விபரீதம்… நாமக்கலில் கோர விபத்து…!!

கார் மீது இருசக்கர வாகனம் மோதி என்ஜீனியர் உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

சேலம் மாவட்டம் மல்லூர் நடேசன் நகர் பகுதியில் பிரபாகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். என்ஜீனியரிங் படித்த இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பிரபாகரன் வேலை காரணமாக நாமக்கல்லுக்கு சென்று விட்டு மீண்டும் இருசக்கர வாகனத்தில் சேலத்திற்கு திரும்பியுள்ளார். அப்போது சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தாளம்பகுதி அருகே சென்று கொண்டிருந்துள்ளார்.

இதனையடுத்து இவரது இருசக்கர வாகனம் முன்பு நாமக்கல் களங்காணி பகுதியை சேர்ந்த வரதராஜ் என்பவர் காரில் சென்று கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் வரதராஜின் காரை பிரபாகரன் முந்த நினைத்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக பிரபாகரின் இருசக்கர வாகனம் கார் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் பிரபாகரனும், வரதராஜனும் பலத்த காயம் அடைத்துள்ளனர்.

இதனை பார்த்த அப்பகுதி வழியாக சென்றவர்கள் பிரபாகரனை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் வரதராசனை நாமக்கல் தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனையடுத்து பிரபாகரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து பிரபாகரின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் வெண்ணந்தூர் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |