Categories
சினிமா தமிழ் சினிமா

சாந்தனுக்கே டஃப் கொடுப்பாரு போல… பாக்யராஜின் கலக்கல் புகைப்படங்கள்…!!!

பாக்யராஜ் ஸ்டைலிஷ் உடையில் போட்டோஷூட் நடத்திய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் 90-களில் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் பாக்யராஜ். இவர் பல திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்து அசத்தியுள்ளார். தற்போது இவர் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். மேலும் பாக்யராஜின் மகன் சாந்தனு தமிழ் சினிமாவின் இளம் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் பாக்கியராஜ் ஸ்டைலிஷ் உடையில் போட்டோஷூட் நடத்திய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சாந்தனுக்கே டஃப் கொடுப்பாரு போல என மீம்ஸ் உருவாக்கி பகிர்ந்துள்ளனர். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Categories

Tech |