இந்திய ராணுவ தளபதியான நரவனே, ஐந்து நாட்கள் பயணமாக இஸ்ரேல் நாட்டிற்கு சென்றுள்ளார்.
இஸ்ரேல் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டிருக்கும் ராணுவ தளபதி, அங்கு மூத்த ராணுவ அதிகாரிகளையும், அரசு அதிகாரிகளையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். மேலும் இரு நாட்டின் பாதுகாப்பு உறவையும் மேம்படுத்துவது குறித்தும், இராணுவ கூட்டுறவை முன்னேற்றுவது தொடர்பிலும், அந்நாட்டு ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை செய்ய இருக்கிறார்.
சமீபத்தில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும், பாதுகாப்புத்துறை செயலாளர் அஜய்குமாரும் இஸ்ரேல் நாட்டிற்கு சென்றுள்ளார்கள். இந்நிலையில், இஸ்ரேல் நாட்டு இராணுவத்தினர், லாட்ரன் என்னும் நகரத்தில் இராணுவத்தளபதி நரவனேக்கு அளித்த மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார்.