வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்து 2 பேர் தங்க நகையை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை பகுதியில் ஜீவா- தனபாக்கியம் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அதிகாலை நேரத்தில் தனபாக்கியம் தனது வீட்டு வாசலில் கோலம் போட்டு கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த இரண்டு வாலிபர்கள் தனபாக்ககியத்தின் கழுத்தில் இருந்த10 1/2 பவுன் சங்கிலியை பறித்துக் விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
இதுக்குறித்து தனபாக்கியம் மானாமதுரை காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பெண்ணிடமிருந்து தங்கசங்கிலி பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.