Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் ஜி.வி.பிரகாஷின் ‘ஜெயில்’… வெளியான முக்கிய அப்டேட்…!!!

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயில் படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராகவும், கதாநாயகனாகவும் வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ் . தற்போது இவர் நடிப்பில் ஐங்கரன், அடங்காதே, இடிமுழக்கம், ஜெயில், 4G உள்ளிட்ட பல திரைப்படங்கள் உருவாகி வருகிறது. இதில் ஜெயில் படத்தை வசந்தபாலன் இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷை சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தியது வசந்தபாலன் தான். தற்போது 12 வருடங்களுக்கு பின் வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயில் படத்தில் அபர்ணதி கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும் ராதிகா, பசங்க பாண்டி, நந்தன் ராம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கிரிக்கஸ் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் ஜெயில் படத்திற்கு சென்சாரில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .

Categories

Tech |