இயக்குனர் சீனு ராமசாமி ‘மாமனிதன்’ படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் சேதுபதி பிரபல நடிகராக வலம் வருகிறார். இவர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் ”மாமனிதன்”. இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து காயத்ரி, அனிகா, குரு சோமசுந்தரம் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த படத்தின் இயக்குனர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார். அதில், ‘மாமனிதன்’ படம் அடுத்த வாரம் சென்சார் போகிறது என தெரிவித்திருக்கிறார்.
37 நாள் படப்பிடிப்பில் உருவான#மாமனிதன் திரைப்படம்.
எடிட்டர் ஸ்ரீகர்பிரசாத் அவர்களும் நானும் படத்தை எடிட்டிங் செய்து இனிதே மற்றப் பணிகளும் நிறைவடைந்து
திரைதொடக் காத்திருக்கிறது.அடுத்த வாரம்
சென்சார் போகிறது #மாமனிதன்@thisisysr@sreekar_prasad@VijaySethuOffl@mynnasukumar— Seenu Ramasamy (@seenuramasamy) November 14, 2021