கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் சாலையில் இருக்கும் ஓடைக்குள் இறங்கி விபத்து நேர்ந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம் பகுதியிலிருந்து 2 நோயாளிகளை ஏற்றி கொண்டு வந்த ஆம்புலன்ஸ் ஆனது அரசு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் சாலையில் இருக்கும் ஓடைக்குள் இறங்கி விபத்து நேர்ந்துள்ளது.
இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் தீயணைப்புத்துறை வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத்துறை வீரர்கள் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு நீண்ட நேரம் போராடி ஆம்புலன்ஸ் வாகனத்தை மீட்டெடுத்துள்ளனர்.