பர்கினாபசோ நாட்டில் சுமார் 20 பேர் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
பர்கினாபசோ நாட்டில் உள்ள சாஹெல் என்ற பகுதியில் துணை ராணுவ படையினர் 19 பேர் உட்பட மொத்தம் 20 பேர் பயங்கரவாத தாக்குதலில் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த பயங்கரவாத தாக்குதல் குறித்து வானொலியில் அந்நாட்டின் பாதுகாப்பு மந்திரி மேக்சிம் கோன் அறிவித்துள்ளார்.
மேலும் பொதுமக்கள் ராணுவத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும், பயங்கரவாதம் நடந்த பகுதியை சேர்ந்தவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதேசமயம் எந்த ஒரு அமைப்பும் இந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் பொறுப்பு ஏற்கவில்லை என்றே கூறப்படுகிறது.