சீனாவில் சிக்னலில் நின்று கொண்டிருந்த பெண் உட்பட 7 பேரை முட்டி தூக்கிய எருமையை காவல்துறை அதிகாரிகள் துப்பாக்கியைக் கொண்டு சுட்டுக் கொன்றுள்ளார்கள்.
சீனாவில் குவாங்க்ஷி என்னும் மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் அமைந்துள்ள சிக்னல் ஒன்றில் பொதுமக்கள் நின்று கொண்டிருந்துள்ளார்கள். அப்போது எதிர்பாராதவிதமாக அங்கு வந்த எருமை ஒன்று சிக்னலில் நின்று கொண்டிருந்த பொதுமக்களில் பெண் உட்பட 7 பேரை முட்டியுள்ளது.
அவ்வாறு எதிர்பாராதவிதமாக சிக்னலுக்கு வந்த எருமை ஒன்று அங்கு நின்று கொண்டிருந்த பொதுமக்களில் 7 பேரை முட்டியதால் அவர்கள் படுகாயமடைந்துள்ளார்கள். இது தொடர்பாக காவல்துறையினருக்கு கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் துப்பாக்கியை கொண்டு பொதுமக்களை தாக்கிய எருமையை சுட்டுக் கொன்றுள்ளார்கள்.