செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழகத்தில் மழை பெய்தவுடன் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் மரியாதைக்குரிய திரு நட்டாஜி அவர்கள் தமிழக பாரதிய ஜனதா கட்சியினுடைய தலைவர் சகோதரர் அண்ணாமலை அவர்களை தொடர்பு கொண்டு பாரதிய ஜனதா கட்சியினுடைய தொண்டர்கள், சகோதரர்கள் அனைவரும் இணைந்து வெள்ள நிவாரண பணிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு கொடுப்பது, மளிகை பொருள் கொடுப்பது போன்ற பணிகளை செய்ய சொல்லி இருந்தார்கள்.
அவர்களுடைய ஆணைக்கிணங்க பாரதிய ஜனதா கட்சியின் சகோதரர்கள் தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நாம் சேவைப் பணிகளை செய்து கொண்டிருக்கின்றோம். பாரதிய ஜனதா கட்சி எப்பொழுதுமே சேவை செய்து கொண்டிருக்கின்ற ஒரு கட்சி, உங்களுக்கெல்லாம் தெரியும். கொரோனா நேரத்தில் கூட நாங்கள் எல்லாம், மற்ற மற்ற கட்சிகள் எல்லாம் கூட ஒதுங்கியிருந்த நேரங்களில், பயந்து கொண்டிருந்த நேரங்களில்… பாரதிய ஜனதா கட்சி முன்வந்து பொதுமக்களுக்கு சேவை செய்தோம்.
அதே போல தான் இப்பொழுதும் வெள்ள நிவாரண பணிகளில் பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்கள் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு சேவை செய்து கொண்டிருக்கின்றோம். உங்களுக்கெல்லாம் தெரியும்… மரியாதைக்குரிய பாரத பிரதமர் திரு நரேந்திர மோடிஜி அவர்கள் தமிழக முதலமைச்சர் அவர்களை தொடர்பு கொண்டு வெள்ள நிவாரணத்திற்காக மத்திய அரசாங்கம் தேவையான உதவிகளை செய்யும் என்று வாக்குறுதியை கொடுத்திருக்கிறார்கள். தேவையான உதவிகளையும் செய்து கொண்டிருக்கின்றோம்.
மத்திய அரசாங்கத்தின் சார்பில் என்னென்ன உதவிகள் இங்கே தேவைப்படுகிறதோ அத்தனை உதவிகளும் செய்து கொண்டிருக்கின்றோம். தமிழக ஆளுநர் மரியாதைக்குரிய திரு வி.என். ரவி ஜி அவர்களும் கூட பிரதமர் அவர்களை சந்தித்து, உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களை சந்தித்து தமிழகத்திற்கு செய்த உதவிகளுக்காக அவர்களுக்கு நன்றி சொல்லி இருக்கிறார். தமிழகத்திற்கு மத்திய அரசாங்கம் சார்பில் அனைத்து உதவிகளும் செய்வதற்கு மத்திய அரசாங்கம் தயாராக இருக்கின்றது.