நகையை பறித்த மர்ம நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெள்ளக்கோட்டை பகுதியில் காசிராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மர அறுவை மில் வைத்து நடத்தி வருகிறார். கடந்த நவம்பர் மாதம் 13 – ஆம் தேதியன்று மதிய உணவு இடைவெளியின் போது காசிராஜனின் தாய் கோமதியம்மாள் மட்டும் தனியாக இருக்கின்றார். அப்போது அறுவைமில்லின் பின்புறத்திலிருந்து ஹெல்மெட் அணிந்து கொண்டு மர்ம நபர் உள்ளே புகுந்துவிட்டார். அதன் பிறகு கோமதியம்மாளை தாக்கி அவர் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் நகையை மர்மநபர் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து காசிராஜன் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சி.சி.டிவி காட்சியை ஆராய்ந்துள்ளனர். இதனை அடுத்து சந்தேகத்தின் அடிப்படையில் சிவகாசி பகுதியில் வசிக்கும் கருத்தபாண்டி என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதன்பிறகும் கருத்தப்பாண்டி தான் 10 பவுன் தங்க நகை கொள்ளையடித்து சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன் பின்னர் கருத்தப்பாண்டியிடம் இருந்த 10 பவுன் நகை மற்றும் அவர் திருட்டுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.