திருப்பதியில் 29வது தெற்கு மண்டல கவுன்சில் கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் சார்பில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்றார். அதன் பிறகு இந்த கூட்டத்தில் ஸ்டாலின் உரையை பொன்முடி வாசித்தார். அதில், மழையில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க வேண்டியிருப்பதால் கூட்டத்தில் என்னால் பங்கேற்க முடியவில்லை.
அதனை தொடர்ந்து உலகின் மிகப் பழமையான மொழிகளான தமிழ் மொழி இலங்கை மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தேசிய மொழியாக இருக்கிறது. எனவே தமிழ் மொழியை இந்தியாவின் ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்.
மேலும் தமிழகத்தில் சமூக பாதுகாப்பு திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் முன்மாதிரி மாநிலமாக திகழ்கிறது. ஆனால் மாநிலங்களுக்கு இடையேயான தேவையற்ற வழக்குகள் மற்றும் பகைகள் ஆகியவற்றால் வளர்ச்சி பாதிக்கப்படும். எனவே பிரச்சினைகளை அன்பெனும் பொதுமொழி கொண்டு தீர்வுகாண முன்னேற்ற பாதையில் நடை போடுவோம் என்று அவர் அதில் குறிப்பிட்டிருந்தார்.