Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

வேட்டி, சட்டையில் நாற்று நட்ட மலேசிய அமைச்சர்!

மலேசியாவின் சிலாங்கூர் மாகாண அமைச்சர் முகமது கைருதீன் தமிழ்நாட்டின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து, விவசாயப் பணிகளை செய்து அசத்தியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் உள்ள விவசாய நிலங்களை மலேசியாவின் சிலாங்கூர் மாகாணத்தின் விளையாட்டுத்துறை மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் முகமது கைருதீன் பார்வையிட்டார்.அப்போது தமிழ்ப் பாரம்பரிய முறைப்படி வேட்டி, சட்டை உடை அணிந்து வந்த அவர், உறி அடித்தும், மாடுகளை வைத்து ஏறு பூட்டியும் அசத்தினார்.

இதில் முத்தாய்ப்பாக தமிழ் மக்களுடன் இணைந்து விவசாய நிலத்தில் பயிர் நடவு செய்தும் மகிழ்ந்தார். பின்னர் பேசிய அவர், ‘தமிழ்நாட்டிற்கு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ் மக்கள் பழக இனிமையானவர்களாக இருக்கிறார்கள். விவசாயம் குறித்து அறிந்து செல்வதற்காகத் தமிழ்நாட்டிற்கு வந்தேன்’ எனவும் தெரிவித்தார்.

Categories

Tech |