Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திருமணமான ஒரு வாரத்தில் சோகம்… தேனிலவு சென்ற புது ஜோடி… பாராசூட் சாகசப் பயணத்தால் கணவன் மரணம்..!!

தேனிலவுக்காக சிம்லா சென்ற புது மாப்பிள்ளை, பாராசூட் சாகசத்தில் ஈடுபட்டபோது காற்றின் வேகத்தில் அதன் கயிறு அறுந்ததால் பள்ளத்தாக்கில் சிக்கி உயிரிழந்தார்.

சென்னை அமைந்தகரையைச் சேர்ந்தவர்களான அரவிந்த், பிரீத்தி ஆகியோருக்கு கடந்த பத்தாம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த சில தினங்களில் புது தம்பதி தேன் நிலவுக்காக சிம்லா சென்றுள்ளனர். சிம்லாவில் சில இடங்களைச் சுற்றிப்பார்த்த தம்பதி, பாராக்ளைடிங் எனப்படும் பாராசூட் சாகசத்தில் ஈடுபட்டுள்ளனர். இருவரும் தனித்தனியாக பாராசூட்டில் சாகசம் மேற்கொண்டுள்ளனர். இருவரின் பாராசூட்டிலும் தலா ஒரு பைலட் இருந்துள்ளனர்.

Image result for சென்னை அமைந்தகரையில் சேர்ந்தவர்கள் அரவிந்த், ப்ரீத்தி

இந்நிலையில், பிரீத்தி தான் சென்ற பாராசூட்டில் பைலட்டின் உதவியுடன் பத்திரமாகத் திரும்பியுள்ளார். பின்னர் தனது கணவர் வானத்தில் பாராசூட் சாகசம் செய்வதை ஆர்வத்துடன் பார்த்து ஆர்ப்பரித்திருக்கிறார். அதன்பிறகு அரவிந்த் சென்ற பாராசூட் மாயமாகியது. நீண்ட நேரமாகியும் அவருடைய பாராசூட் திரும்பவில்லை. இதனால் அச்சமடைந்த பிரீத்தி தன் கணவன் திரும்பி வரவில்லை என்று அங்கிருந்த மற்ற பாராசூட் பைலட்களிடம் கூறியுள்ளார்.

Image result for சென்னை அமைந்தகரையில் சேர்ந்தவர்கள் அரவிந்த், ப்ரீத்தி

பிரீத்தி கூறிய தகவலின்பேரில், தேடுதல் வேட்டையில் இறங்கிய பைலட்கள், அரவிந்த் சென்ற பாராசூட் விபத்துகுள்ளானதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும், அவர் சென்ற பாராசூட்டின் கயிறு காற்றின் வேகத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் அறுந்ததால், நிலைதடுமாறி அரவிந்தும் அவருடன் சென்ற பைலட்டும் பள்ளத்தாக்கில் விழுந்தது தெரியவந்தது. பள்ளத்தாக்கில் விழுந்த அரவிந்த் உயிரிழந்த நிலையில், பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட பாராசூட் பைலட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Image result for சென்னை அமைந்தகரையில் சேர்ந்தவர்கள் அரவிந்த், ப்ரீத்தி

திருமணமான ஒரு வாரத்திலேயே தன் கணவனை பறிகொடுத்த பிரீத்தி அவருடைய உடலைப் பார்த்து கதறி அழுதார். மேலும் தேனிலவுக்குச் சென்ற புது மாப்பிள்ளை பரிதாபமாக உயிரிழந்ததால், இரு வீட்டாரும் ஆழ்ந்த துக்கத்தில் உள்ளனர். உடற்கூறாய்வு செய்த பின், அரவிந்தின் உடல் சென்னைக்கு எடுத்து வரப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Categories

Tech |