செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, இப்பொழுது கூட இந்த பகுதியிலே பனையுத்தம் நகர் அந்த வீதியில் நடந்து செல்கின்ற போது அங்கே இருக்கின்ற மக்கள் குறிப்பிட்டார்கள்,…..தாய்மார்கள் குறிப்பிட்டார்கள் கிட்டத்தட்ட ஆறு நாட்களாக தண்ணீர் தேங்கி நிற்கின்றன, இதுவரை யாரும் பார்க்கவில்லை,
நீங்கள் வருவதாக தெரிந்தவுடன் நேற்று இரவே பல மோட்டார்களை வைத்து தண்ணீர் இறைத்து இன்றைக்கு சுத்தபடுத்துகின்றார்கள், இந்த வீதியிலே தண்ணீர் தேங்கி இருந்த காரணத்தினால் பெரியவர்களும், குழந்தைகளும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. பல குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்திருக்கிறது என்று கூட சொன்னார்கள் இப்படி மழைக்காலங்களில் பெய்கின்ற மழை நீரால் விஷக்காய்ச்சல் மக்களுக்கு ஏற்படும்.
அதை உடனுக்குடன் சிகிச்சை அளிக்க வேண்டும், அதற்காக மருத்துவ முகாம் நடத்தப்பட வேண்டும், அதையும் செய்யவில்லை இந்த திராவிட முன்னேற்றக் கழக அரசு. மாண்புமிகு அம்மாவுடைய அரசு மழைப்பொழிவு ஏற்பட்ட உடன் உடனடியாக மக்கள் நல்வாழ்வு துறை மூலமாக நடமாடும் மருத்துவ முகாம் நடத்தினோம் என தெரிவித்தார்.