கன்னியாகுமரி மாவட்டத்தில் நிவாரண முகாம்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவற்றை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் நிவாரண முகாம்களாக உள்ள பள்ளிகளுக்கும், வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை ஒருநாள் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் நிவாரணமாக செயல்படும் ஆவடி நடுகுதகை நடுநிலைப்பள்ளி, திருத்தணி பூணிமாங்காடு உயர்நிலைப் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுகிறது.