நீங்கள் செல்லக்கூடிய பகுதிகளை முன்கூட்டியே அறிந்த அந்தப் பகுதியில் மட்டும் இருக்கக் கூடிய பாதிப்புகளை அப்புறப்படுத்தி இருக்கிறார்கள் என்று குற்றச்சாட்டு முன்வைக்கிறார்கள், முழுமையான மீட்பு பணிகள் தமிழக அரசு செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது என ஓ.பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் கேட்ட போது,
இப்போது நாம் அனைவரும் ஒன்றுகூடி உரிய நிவாரணம் கொடுக்கப்படுகின்ற பணியைத் தான் கவனிக்க வேண்டும், நீ செய்யவில்லை, நான் செய்தேன் என்று விவாதத்திற்குள் போக முடியாது. இப்போது மக்களுக்கு நாம் நிவாரணம் கொடுக்க வேண்டும் அதன் முக்கியமான பணியாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கருதுகிறது.
நாங்கள் எந்த விவாதங்களும் செய்வதற்காக இங்கே வரவில்லை. 2015 இல் மிகப் பெரிய வெள்ளம் வந்தது, மழை வந்தது. எல்லாம் எவ்வளவு பெரிய பாதிப்பு இருந்தது அதற்கு பின்னால் எடுத்த பல்வேறு நடவடிக்கையின் காரணமாக தான் மழைபெய்த ஓரிரு நாட்களில் முழுமையாக கூடிய ஒரு சூழல் ஏற்பட்டிருக்கிறது என்பதை தான் இன்றைக்கு வரலாறு சொல்லும் என தெரிவித்தார்.