தேசிய தன்னார்வ ரத்த தானம் முகாமானது புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்றது. இதில் முதல்வர் ரங்கசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரத்ததானம் வழங்கிய தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு விருதுகள், சான்றிதழ்களை வழங்கினார். இதனை தொடர்ந்து பேசிய அவர், புதுச்சேரி கதிர் கிராமத்தில் உள்ள இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு எம்ஆர்ஐ ஸ்கேன் வசதி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று என்பது பெரிய சவாலாக உள்ளது. நோய்த்தொற்று காலத்தில் சிறப்பாக செயல்பட்ட அனைவருக்கும் நன்றி. அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவேண்டும். புதுச்சேரியில் கொரோனா சிகிச்சைக்காக புதிய மருத்துவமனை கட்டுவதற்கு அரசு முடிவெடுத்துள்ளது. அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதற்காக மத்திய அரசிடம் நிதி கேட்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.