Categories
தேசிய செய்திகள்

சிறுபான்மையினரிடையே தீவிரவாதம் வளர்ந்து வருகிறது… மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டு..!!

ஹைதராபாத்தில் சிறுபான்மை தீவிரவாதம் வேகமாக பரவிவருவதாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேற்குவங்கம் கூச் பேகர் நகரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பாக பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில், அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “இந்துக்களிடையே தீவிரவாதம் இருப்பதுபோல், சிறுபான்மையினரிடையேயும் தீவிரவாதம் வளர்ந்துவருகிறது.

Image result for Mamata Banerjee accuses Asaduddin Owaisi of divisive

ஹைதராபாத்தில் ஒரு அரசியல் கட்சி உள்ளது. அது, பாஜகவிடம் பணம் வாங்கிவிட்டு செயல்படுகிறது” என்றார். பெயர் குறிப்பிடாமல் அவர் விமர்சித்த கட்சி ஏ.ஐ.எம்.ஐ.எம் என்றும் அக்கட்சியின் தலைவரான ஒவைசியிடமிருந்து சிறுபான்மையினர் ஒதுங்கிருக்கும்படி மம்தா எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Image result for West Bengal Chief Minister Mamata Banerjee has accused minority extremism of spreading in Hyderabad.

இதற்கு பதிலடி தந்துள்ள ஒவைசி, “எங்கள் கட்சி மேற்குவங்கத்தில் வளர்ச்சியடைந்துள்ளது என்பதை என்னை விமர்சிப்பது மூலம் அங்குள்ள இஸ்லாமியர்களிடம் மம்தா தெளிவுபடுத்தியுள்ளார். அவரின் கருத்து மூலம் மம்தாவின் பயம் வெளிப்பட்டுள்ளது” என்றார்.

Categories

Tech |