ரிஷபம் ராசி அன்பர்களே..!! உங்களிடம் பலரும் அன்பு பாராட்டக் கூடும். மனதில் புதிய உத்வேகம் உருவாகும். தொழில் வியாபாரம் செழித்து வளரும். உபரி பண வருமானம் கிடைக்கும். எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும். இன்று மனதில் ஏதாவது கொஞ்சம் கவலை இருந்துக் கொண்டே இருக்கும். பய உணர்வு கொஞ்சம் இருக்கும். தூக்கம் குறையக்கூடும். சரியான நேரத்திற்கு தூங்கச் செல்லுங்கள் .வாகனத்தில் செல்லும்போது கவனமாக செல்லுங்கள்.
அடுத்தவருடன் பகை ஏற்படாமல் இருக்க கவனமாக பேசுங்கள். மாணவர்களுக்கு தொழில்நுட்பக் கல்வியில் ஆர்வம் ஏற்படும். சாமர்த்தியமாகப் பேசி காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். நீண்ட தூரத்திலிருந்து வரும் தகவல்கள் நன்மையாக இருக்கும். இன்று மனம் மகிழும். மனம் தெளிவாகவும் இருக்கும். இன்று கணவன் மனைவிக்குள் அன்பு இருக்கும்.
அது மட்டுமில்லாமல் உடல் நிலையில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள் அது போதும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுபோலவே இன்று காக்கைக்கு அன்னமிட்டு வாருங்கள் நீங்கள் செய்யக்கூடிய காரியங்கள் நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் மஞ்சள் நிறம்