Categories
மாநில செய்திகள்

பாயும் ஆறுகளின் தரம்… தமிழகம் முழுவதும் 14 இடங்களில்…. அரசு அரசாணை வெளியீடு….!!!

தமிழகம் முழுவதும் பாயும் ஆறுகளின் தளத்தை கண்காணிப்பதற்கு 14 இடங்களில் நிரந்தர நீர் தரக் கண்காணிப்பு நிலையம் அமைப்பதற்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தின் சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம், வனத் துறை வெளியிட்ட அரசாணையில், காவிரி, பவானி, நொய்யல், தாமிரபரணி உள்ளிட்ட 14 இடங்களில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் நிரந்தர நீர் தர கண்காணிப்பு ஆணையம் அமைப்பதற்கு தேவையான நிலம் பொதுப்பணித்துறை அல்லது மாவட்ட ஆட்சியரிடம் இருந்து திட்டமிட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

மேலும் சிதிலமடைந்த ஏற்கனவே உள்ள 8 நீர் தர கண்காணிப்பு நிலையங்களை புதுப்பிப்பதற்கும், குடிநீர் அல்லாத தேவைகளுக்கு பயன்படும் நீரின் தரத்தை ஆய்வு செய்வதற்கு இரண்டு நடமாடும் கண்காணிப்பு நிலையங்கள் விரிவாக்கம் செய்ய நிதி ஒதுக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |