மிதுனம் ராசி அன்பர்களே..!! உங்களின் நல்ல செயலை சிலர் பரிகாசம் செய்யக் கூடும். மற்றவர்கள் உங்களை குறை சொல்லக்கூடும். ஆனால் எதைப்பற்றியும் கவலை வேண்டாம். பயனறிந்து பேசுவதால் உரிய நன்மை கிடைக்கும். தொழிலில் நிலுவைப் பணியை நிறைவேற்றவும். சீரான அளவில் பணவரவு இருக்கும். அதிகம் பயன் தராத பொருட்களை விலைக்கு வாங்க வேண்டாம். இன்று குடும்பத்தில் இருப்பவருடன் அனுசரித்துச் செல்வது நல்லது.
கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் ஏற்படலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவது நல்லது. திடீர் செலவு கொஞ்சம் ஏற்படும். பெண்கள் மற்றவர்களிடம் கவனமாகப் பேசுவதும் கருத்து வேற்றுமை வராமலிருக்கும். வீண் அலைச்சல் குறையும். வாகனங்களில் உபயோகப்படுத்தும் பொழுது கவனமாக இருங்கள்.
வாகனச் செலவு கொஞ்சம் இருக்கும். கூடுமானவரை இன்று நீங்கள் நிதானத்தை கடைபிடிப்பது ரொம்ப நல்லது. இன்று நீங்கள் முக்கியமான பணி மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். அது மட்டுமில்லை இன்று காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்குங்கள். அனைத்து காரியமும் நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிஷ்ட எண் : 3 மற்றும் 4
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்