வரப்போகும் குளிர்காலத்தை சமாளிப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக பெடரல் அரசு ஆலோசனை செய்து வருகிறது.
சுவிட்சர்லாந்தின் அறிவியல் பணிக்குழு தலைவரான டஞ்சா ஸ்டாட்லர் வரப்போகும் குளிர்காலம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “அண்மைக்காலமாக கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கையானது அதிகரித்துள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்தாதவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.
நாம் தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கு தாமதப்படுத்தினால் வரப்போகும் குளிர்காலம் கண்டிப்பாக மிகுந்த பயத்தை தரும். இது மட்டுமின்றி சில வாரங்களாக இந்த விவகாரம் தொடர்பாக பெடரல் அரசு ஆலோசனை செய்து வருவதாகவும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக மக்களின் அலட்சியப் போக்கு நீடிக்கும் எனில் கண்டிப்பாக 30,000 பேர் வரை மருத்துவமனையை நாடும் சூழ்நிலை உருவாகும். இதற்காக மக்கள் கட்டாயமாக மாஸ்க் அணிவது, கொரோனா தடுப்பூசி சான்றிதழை பயன்பாட்டிற்கு கொண்டு வருவது, பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்வது அதிக பலன்களை தரும்” என்றும் தெரிவித்துள்ளார். இருப்பினும் மீண்டும் ஒரு முறை பொது முடக்கம் அமலுக்கு வராது என்றும் கூறியுள்ளார்.