கடகம் ராசி அன்பர்களே..!! சமூகத்தில் உங்கள் மீதான நல்ல மதிப்பு இன்று அதிகரிக்கும். வெகுநாட்களாக இலட்சியத்தை நிறைவேற்ற கடுமையாக உழைத்துக் கொண்டிருப்பீர்கள். அது உங்களுக்கு இன்று நல்ல முடிவை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி திருப்திகரமாக இருக்கும். தாராள அளவில் பண வரவு கிடைக்கும். நண்பர்களுடன் விருந்து விழாவில் கலந்துக் கொள்வீர்கள். கூடுமானவரை காரியங்களை செய்யும்போது மட்டும் நிதானமாக செய்யுங்கள். இன்று மனக்கவலை விலகிச்செல்லும்.
மற்றவர்களிடம் பகை ஏற்படாமல் பழகுவது நல்லது. காரியங்களில் மெத்தனப்போக்கு கொஞ்சம் காணப்படும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் குறித்த கவலை இருக்கும். சக மாணவருடன் நிதானமாக பழகுவது நல்லது. கணவன் மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை கொஞ்சம் வரக்கூடும். பிள்ளைகள் கல்வியில் முன்னேற்றமடைய தேவையான உதவிகளைச் செய்வீர்கள். இன்றைய நாள் ஓரளவு சிறப்பான நாளாக இருக்கும். பெண்களுக்கு அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
பொறுமையை மட்டும் இழக்க வேண்டாம். காரியங்களை செய்யும்போது பொறுமையாகச் செய்யுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுபோலவே காக்கைக்கு அன்னம் இடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். உங்களுடைய கர்மவினைகள் தீர்ந்து அனைத்து காரியங்களும் சிறப்பாக நடக்கும். தயவு செய்து இதனை நீங்கள் செய்து பாருங்கள்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு
அதிஷ்ட எண் : 3 மற்றும் 4
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்