சிம்மம் ராசி அன்பர்களே..!! உங்கள் பேச்சில் வசீகரம் இருக்கும். புதியவர் நட்புடன் அன்பு பாராட்டுவார். தொழில் வியாபாரம் செழிக்க அனுகூல காரணி பலம் பெறும். உபரி பண வருமானம் கிடைக்கும். இஷ்ட தெய்வ வழிபாடு நிறைவேற்றுவீர்கள். இன்று பிரச்சினைகள் அனைத்துமே சரியாகும். எந்த சூழ்நிலையிலும் சுய கௌரவத்தை விட்டுக் கொடுக்காமல் செயல்படுவீர்கள். மன தைரியம் உண்டாகும். மனதில் இருந்த கவலை நீங்கும். வருத்தம் நீங்கி மகிழ்ச்சியும் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எளிதாக பணிகளை செய்து முடிப்பார்கள்.
மேல் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வழக்குகளில் நல்ல தீர்ப்பு வரும். ஆர்டர்கள் புடிப்பதில் இருந்த கஷ்டங்கள் குறையும். இன்று வீண் அலைச்சலும் ஓரளவு குறையும். வெளியூர் பயணங்கள் நல்லபடியாகவே இருக்கும். தன வரவு தாராளமாக இருக்கும் என்பதால் சேமிக்கக்கூடிய எண்ணத்தை மட்டும் வளர்த்துக் கொள்ளுங்கள். இன்று கணவன் மனைவிக்கிடையே சின்ன சின்ன பூசல்கள் இருக்கும் எதையுமே பேசி தீர்த்துக் கொள்ளுங்கள்.
அது போலவே இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு சிறப்பான நிறமாக இருக்கும். அதுபோலவே இன்று காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்குங்கள். எப்பொழுதுமே காக்கைக்கு அன்னம் இடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். உங்களுடைய கர்ம வினைகள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்பை ஏற்படுத்தி கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் நீல நிறம்