கன்னி ராசி அன்பர்களே..!! சிரமங்களுக்காக மனம் வருந்த வேண்டாம். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு உங்களுக்கு நம்பிக்கையை கொடுக்கும். அதிக உழைப்பு தொழில் வியாபாரத்தில் புதிய பரிமாணத்தை உருவாக்கிக் கொடுக்கும். புத்திரர்கள் விரும்பிய பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். தொழில் வியாபாரம் சிறப்பாக இன்று இருக்கும். தொழில் தொடர்பாக கொஞ்சம் அலைய வேண்டி தான் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். சரக்குகளை அனுப்பும் பொழுது கவனமாக பாதுகாப்பாக அனுப்புங்கள்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் காரிய தடைகளை சந்திக்க வேண்டியிருக்கும். அலுவலகப் பணிகள் மெதுவாகத்தான் நடைபெறும். குடும்பத்தில் பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை மீண்டும் தொடர்வீர்கள். சிலர் புதிய வீட்டுக்கு குடி போக கூடிய சூழலும் நன்றாகவே இருக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். அதுபோலவே மாணவர்கள் கொஞ்சம் கடுமையாக உழைத்து பாடங்களை படிக்க வேண்டும். பாடத்தில் மட்டும் கவனத்தை செலுத்துவது நல்லது.
அது மட்டும் இல்லை இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடியதாக இருக்கும். அதுபோலவே காக்கைக்கு அன்னம் இடுவதை வாடிக்கையாக வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இதனால் உங்களுடைய கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி காரியத்தில் சிறப்பான வெற்றியைப் பெறமுடியும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் நீல நிறம்