மருத்துவமனைகளில் பகல் நேரங்களில் மட்டுமே பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து தற்போது இரவு நேரத்திலும் பிரேத பரிசோதனை நடத்த அனுமதிப்பது குறித்து மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் உள்ள சுகாதார பணிகள் இயக்குநரகத்தின் தொழில்நுட்ப குழு சமீபத்தில் ஆலோசனை மேற்கொண்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில், ஏற்கனவே இரவு நேரங்களில் பிரேத பரிசோதனையை சில நிறுவனங்கள் நடத்தி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டது. எனவே மருத்துவமனைகளில் இரவு நேரத்திலும் பிரேத பரிசோதனை நடத்த மத்திய அரசு விரைவில் அனுமதி அளிக்கும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், தற்போது தொழில்நுட்ப முன்னேற்றத்தின் காரணமாக பிரேத பரிசோதனைக்கு தேவையான விளக்கு வெளிச்சம் மற்றும் இதர உள்கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் கிடைக்கின்றன என்பதனால் இரவு நேரத்தில் பிரேத பரிசோதனை நடத்துவது சாத்தியமான ஒன்று. இதன் மூலமாக உறுப்பு தானம் பெற முடியும் என்பதும் இதற்கு ஒரு காரணம். அதே சமயத்தில் கொலை, கற்பழிப்பு, தற்கொலை மர்ம சாவுகள் ஆகிய விவகாரங்களில் இரவுநேர பிரேத பரிசோதனை அனுமதிக்கப்படாது என்று தெரிவித்துள்ளன.