Categories
உலக செய்திகள்

“அமெரிக்க அதிபருடன் சீன அதிபர் காணொலிக்காட்சியில் சந்திப்பு!”.. இருதரப்பு உறவுகளை மேம்படுத்த ஆலோசனை..!!

அமெரிக்க அதிபர் ஜோபைடனும், சீன நாட்டின் அதிபர் ஜின்பிங்கும் இன்று காணொலிக் காட்சி மூலமாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகிலேயே, பொருளாதாரத்தில் முன்னிலையில் இருக்கும் பெரிய நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையே இதற்கு முன்பு இல்லாத அளவிற்கு, சமீப வருடங்களில் மோதல் அதிகரித்துள்ளது. வர்த்தகரீதியாக பிரச்சனை ஏற்பட்டு, தற்போது கடும் மோதலாக மாறியிருக்கிறது.

அதாவது, கொரோனா தொற்று பிரச்சனை, வர்த்தகம், உய்குர் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்கள், தைவான் மற்றும் ஹாங்காய் மீது ஆக்கிரமிப்பு செய்தது ஆகிய பிரச்சனைகளில் இரண்டு நாடுகளுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இருப்பினும், அமெரிக்க நாட்டின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் அரசாங்கத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஜோபைடன் அரசிற்கு சீன அரசு அழைப்பு விடுத்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் சீன நாட்டின் அதிபர் ஜின்பிங் இன்று காணொலிக் காட்சியில் சந்தித்து பேசியிருக்கிறார்கள். அதில், இரு நாட்டின் உறவுகள், கொரோனா பரவல் போன்ற சர்வதேச பிரச்சினைகள் பற்றி இருநாட்டு தலைவர்களும் ஆலோசிப்பார்கள் என்று கூறப்பட்டிருக்கிறது.

 

Categories

Tech |