கேரள மாநிலத்தில் சில தினங்களாகவே கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை அன்று கேரளாவின் எர்ணாகுளம், திருச்சூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்திருந்தது. இதற்கிடையில் நேற்று இடைவிடாது பெய்த கனமழையின் காரணமாக பல மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டன.
இதில் அதிக அளவில் பொருட்சேதம் ஏற்பட்டது மட்டுமல்லாமல் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்த கனமழையால் 25 வீடுகள் பகுதியாக சேதமடைந்துள்ளன. இதில் 2 குழந்தைகள் உட்பட 3 பேர் பலியாகியுள்ளனர். அதன்படி, எர்ணாகுளத்தில் ஏற்பட்ட மண்சரிவில் டிரைவர் ஒருவர் சிக்கி உயிரிழந்துள்ளார். எண்ணூர் மற்றும் திருச்சூர் மாவட்டங்களில் வெவ்வேறு சம்பவங்களில் 2 குழந்தைகள் இடிபாடுகளில் சிக்கி பலியாகி உள்ளனர்.