வித்தியாசமாக இருந்த வெள்ளை நிற காகத்தை பொதுமக்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நாச்சிக்குப்பம் கிராமத்தில் காகங்களுடன் வெள்ளை நிறத்தில் பறவை ஒன்று சுற்றி திரிந்துள்ளது. இதனை ஏதோ விசித்திர பறவை என நினைத்து பொது மக்கள் பார்த்துள்ளனர். இந்நிலையில் அந்த வித்தியாசமான பறவை வெள்ளை நிற காகம் என்பது தெரியவந்துள்ளது.
இது தெரிந்தவுடன் பொதுமக்கள் அதனை வியப்புடன் பார்க்கின்றனர். மேலும் நாச்சிக்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் ஏராளமான பொதுமக்கள் உணவுடன் வந்து அந்த வித்தியாசமான வெள்ளை நிற காகத்தை வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.