தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளாக அரியர் வைத்துள்ள மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு 33 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைகழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி தெரிவித்துள்ளார். , வருகின்ற நவம்பர் -டிசம்பர் மாத செமஸ்டரின் போது தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்களின் வசதிக்கு மாநிலம் முழுவதும் 33 மையங்களில் அமைக்கப்பட்டுள்ளது.
20 ஆண்டுகளாக அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு அதனை கிளியர் செய்ய வருகின்ற நவம்பர் -டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வுகள் நடைபெற உள்ளது.அந்தத் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கான தேர்வு மையத்தை வருகின்ற 18ம் தேதிக்குள் தேர்வு செய்து கொள்ள வேண்டும்.அந்த மையத்தை தேர்வு செய்யவில்லை என்றால் ஏதேனும் ஒரு மையம் ஒதுக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.