Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்கள்…. கோவையில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்னதொட்டிபாளையம் பகுதியில் கட்டிட தொழிலாளியான பாபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மேட்டுப்பாளையம் அன்னூர் சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் மேட்டுப்பாளையம் நோக்கி வேகமாக சென்ற மோட்டார் சைக்கிள் பாபுவின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த பாபு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

மேலும் மற்றொரு மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வாசு மற்றும் அவரது நண்பர் பாரதி ஆகியோருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. அதன்பின் படுகாயமடைந்த இருவரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி வாசு பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |