சேதமடைந்த காணப்படும் தடுப்பு சுவரை சீரமைக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே கெட்டிசமுத்திரம் ஏரி இருக்கிறது. இந்த ஏரியின் அருகே உள்ள சாலையின் வழியாக அந்தியூரில் இருந்து கர்நாடக மாநிலம் மைசூருக்கு பெரும்பாலான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் இந்த சாலையில் விபத்து ஏற்படாமல் இருக்கத்தான் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த தடுப்பு சுவர் உடைந்த நிலையில் காணப்படுகிறது. ஆகவே தடுப்பு சுவரை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க.கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்