கும்பம் ராசி அன்பர்களே..!! கடந்தகால சிரமம் பிறரிடம் சொல்ல வேண்டாம். யாரிடமும் ரகசியத்தை பகிர்ந்துகொள்ள வேண்டாம். செயல்களில் முழு யோசனை அவசியம். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பெறுவதற்கு கூடுதலாகத்தான் பணிபுரிவீர்கள். பணவரவை விட செலவு கொஞ்சம் கூடும். விஷ பிராணிகளிடம் விலகியிருங்கள். இன்று மன அமைதி குறையலாம். கூடுமானவரை ஆலயம் சென்று வாருங்கள். பயணத்தை தவிர்ப்பது நன்மையை கொடுக்கும். ஏனென்றால் பயணம் உங்களுக்கு அலைச்சலை தருவதாக இருக்கும்.
எதிர்பார்த்த பணவரவு உங்களுக்கு வந்து சேரும். இன்று புதிய நபரிடம் கொஞ்சம் கவனமாகவே நடந்து கொள்ளுங்கள். உறவினர் உதவிகள் கிடைக்கும். நண்பர்களின் ஒத்துழைப்புடன் வியாபாரத்தை விரிவாக்கமும் செய்வீர்கள் .இன்று ஏற்றுமதி சம்பந்தமான துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். அது போலவே பங்குச் சந்தையில் உள்ளவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். புதிய வகுப்புகளில் சேர்வதற்கு மாணவர்கள் முயற்சிகளை மேற்கொள்வார்கள். கூடுமானவரை படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. ஆசிரியர்களின் சொல்படி நடந்து கொண்டால் அனைத்து காரியம் நல்லபடியாக இருக்கும்.
சக மாணவரிடம் பேசும் போது கொஞ்சம் கவனமாக பேசுங்கள். இன்று குடும்பத்தில் ஓரளவு மகிழ்ச்சி இருக்கும். வீண் வாக்குவாதங்கள் மட்டும் யாரிடமும் நீங்கள் செய்ய வேண்டாம். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடியதாக இருக்கும். அதுபோலவே தினசரி காக்கைக்கு அன்னம் இடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். உங்களுடைய கர்ம தோஷங்களை நீக்கி காரியங்களை சிறப்பாக செய்ய வைக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிஷ்ட எண் : 6 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்