மீனம் ராசி அன்பர்களே..!! இன்று சிரமமான சூழ்நிலை மாறி மனம் மகிழ்ச்சியாக காணப்படும். எண்ணத்திலும் செயலிலும் உத்வேகம் பிறக்கும். மனம் உற்சாகமாக இருக்கும். தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். பண கடனை அடைக்க கூடிய சூழல் இருக்கும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை கொடுக்கும். மன தைரியம் கூடும். காரியத்தில் அனுகூலம் ஏற்படும். எதிர்பார்த்த பணமும் கைக்கு வந்து சேரும். மாணவர்கள் இன்று கல்வியில் தனது திறமையை வெளிக்காட்டுவார்கள். பாடங்களை படிப்பதில் தீவிர கவனம் செலுத்துவீர்கள். அரசியல் துறையினருக்கு எடுக்கக்கூடிய ஒப்பந்தங்கள் நன்றாக இருக்கும்.
சில விஷயங்களை மேற்கொள்ளும் போது மட்டும் கொஞ்சம் கடுமையாக ஆராய்ந்து மேற்கொள்வது சிறப்பு. அதுபோலவே வெளிநாட்டு பயணங்கள் உங்களுக்கு நல்ல அனுகூலத்தை கொடுக்கும். லாபம் பன்மடங்கு பெருகும். மேலிடத்தின் கனிவான பார்வை உங்களுக்கு கிடைக்கப் பெறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நல்ல வளர்ச்சிகரமான சூழ்நிலை உருவாகும். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். சகோதரர் வகையில் ஒற்றுமை இருக்கும்.
இன்று எல்லாவகையான நன்மைகளையும் நீங்கள் அடையக்கூடும். இன்று முக்கியமான பணியை மட்டும் நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கும். அதுபோலவே தினசரி காக்கைக்கு அன்னம் இடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இது உங்களுடைய கர்ம தோஷங்கள் அனைத்தையும் நீக்கி உங்களை செல்வ செழிப்பாக வாழ வைக்கும். தயவு செய்து இதனை நீங்கள் செய்து பாருங்கள்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6 மற்றும் 8
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்