Categories
உலக செய்திகள்

“ஆரம்பப்பள்ளி மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்!”.. பிரான்சில் வெளியான அறிவிப்பு..!!

பிரான்சில் கொரோனா தொற்று அதிகமாக பரவுவதால் நாடு முழுக்க தொடக்கப்பள்ளிகளில் முகக்கவசம் அணியும் விதிமுறை மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது.

பிரான்சில் ஒவ்வொரு நாளும் கொரனோ பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே, பள்ளி மாணவர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று விதிமுறை மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. அதாவது கடந்த செப்டம்பர் மாத கடைசியில் கொரோனா தொற்று குறைவாக இருக்கும் ஆரம்ப பள்ளிகளில் குழந்தைகள் கட்டாயமாக முகக்கவசம் அணிய தேவையில்லை என்று அரசு அறிவித்திருந்தது.

மேலும், பல்வேறு துறைகளில் முகக்கவசம் கட்டாயமில்லை என்று அறிவிக்கப்பட்டது.  ஆனால்,  நாட்டில் தற்போது புதிதாக பரவிய தொற்றுகள், நாளொன்றுக்கு சராசரியாக 10 ஆயிரத்திற்கும் அதிகமாக இருக்கிறது. கொரோனா பரவலின் புதிய அலையை சமாளிக்க, பிரதமர் இம்மானுவேல் மேக்ரோன், கடந்த செவ்வாய்க்கிழமையன்று ஒரு தொலைக்காட்சியில்  பேசினார்.

அப்போது, அவர், கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசிகளை வயதானவர்கள் எடுத்துக்கொள்ளுமாறு வலியுறுத்தியிருந்தார். மேலும் அவர் கூறுகையில், ஜெர்மனி, இங்கிலாந்து போன்ற நாடுகளில் கொரோனா தொற்றின் ஐந்தாவது அலை பரவி வருகிறது. அங்கு ஒவ்வொரு நாளும் 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள் என்று கூறியிருக்கிறார். மேலும், பிரான்சில் கடந்த வாரத்தை விட 40% தொற்று அதிகரித்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

Categories

Tech |