தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்தது. அதுமட்டுமல்லாமல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கரையைக் கடந்து சென்றதால் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இடைவிடாது கன மழை வெளுத்து வாங்கியது. அதனால் சாலைகள் அனைத்திலும் மழைநீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. அதுமட்டுமல்லாமல் விளைநிலங்களில் வெள்ள நீர் புகுவதால் பயிர்கள் அனைத்தும் சேதம் அடைந்துள்ளன.
இதனை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று உறுதியளித்தார். இந்நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்கள் ஹெக்டேர் ஒன்றுக்கு 20 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.கிராம நிர்வாக அலுவலர் மூலம் கணக்கெடுப்பு செய்யப்பட்ட வங்கியில் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை சீரமைக்க 300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.