Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே இனி ஈஸியா வீடு கட்டலாம்…. முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்த அதிரடி திட்டம்…..!!!!

தமிழக அரசு சிமெண்ட் வலிமை என்ற புதிய வணிகப் பெயருடன் நடப்பாண்டு முதல் வெளிச்சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என்று கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற சட்டப் பேரவையில் தொழில் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.

இந்நிலையில் தமிழக அரசியல் டான்செம் நிறுவனம் சார்பாக குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட உள்ள வலிமை சிமெண்ட்டை முதல்வர் ஸ்டாலின் இன்று அறிமுகம் செய்து விற்பனையை தொடங்கி வைத்தார். தமிழக அரசின் தமிழ்நாடு சிமெண்ட் கழகம் லிமிடெட் சார்பாக வலியதோர் ஒரு உலகம் செய்வோம் என்ற கருத்தை மையமாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளஇந்த சிமெண்ட் விற்பனைக்கு வருவதன் மூலம் குறைந்த விலையில் தரமான சிமெண்ட்டை பொதுமக்கள் வாங்கலாம். வெளிச்சந்தையில் சிமெண்டின் சில்லரை விற்பனை விலை குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. அதனால் வீடு கட்டும் கனவோடு இருக்கும் மக்கள் தங்கள் கனவினை எளிதாக செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |