Categories
தேசிய செய்திகள்

இனி ரயில்களில் அசைவ உணவு கிடையாது…. IRCTC ஷாக் அறிவிப்பு…!!!

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிஸம் கார்ப்பரேஷன் (IRCTC) விரைவில் சில ரயில்களில் “Vegetarian Friendly Travel” சேவை வழங்க உள்ளதாகவும், அசைவ உணவுக்கு தடை விதிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக மத வழிபாட்டுத் தலங்களை இணைக்கும் வழித்தடங்களில் ஓடும் ரயில்களில் இந்த நடைமுறையைக் கொண்டுவர உள்ளது.

எனவே மத வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லும் ரயில்களில் சைவ உணவு மட்டுமே கிடைக்கும். சாத்விக் கவுன்சில், Vegetarian Freindly சேவைகளை வழங்குவதற்காக IRCTC உடன் இணைந்துள்ளது. IRCTC-யால் இயக்கப்படும் டெல்லியில் இருந்து கத்ராவிற்குச் செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், “சாத்விக்” சான்றிதழ் பெறும் என்றும், அதில் அசைவ உணவுகள் கிடைக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.ஆர்.சி.டி.சி-யின் இந்த முடிவானது கடும் அதிர்ச்சியை உண்டாகியுள்ளது.

Categories

Tech |